ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை பற்றி முக்கிய கேள்விகளும் பதில்களும் | JEE. Important Questions and Answers About Entrance Exam

ஜே இ இ. நுழைவுத் தேர்வை பற்றி முக்கிய கேள்விகளும் பதில்களும்..!

JEE.  Important Questions and Answers About Entrance Exam ..!

Mr.JEE Tamil,

1. யார் எழுதலாம்? 

2. தேர்வு நடத்துவது யார்?

3. எங்கே படிக்கலாம்?

4. என்ன படிக்கலாம்?

5. தயார் செய்வது எப்படி?

6. தேர்வு நடைமுறை

7. ஜே.இ.இ. மெயின்

8. ஜே.இ.இ. அட்வான்ஸ் ?

9. தேர்வு மையங்கள்

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை பற்றி முக்கிய கேள்விகளும் பதில்களும்..!

கேள்வியும் பதிலும்

1. யார் எழுதலாம்? 

◆ 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றது ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இத்தேர்வை எழுதலாம்.

◆  அதாவது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலும் அடுத்த இரண்டு ஆண்டிகளிலும் ஜே.இ.இ. தேர்வை எழுத முடியும்.

◆ 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டிலிருந்து மூன்று முறை இத்தேர்வை எழுதலாம்.

◆ ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.


இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜே.இ.இ. தேர்வை யார் எழுதலாம்? எப்படி தயார் செய்வது என விரிவான அறிமுகத்தைப் பார்க்கலாம்.


2. தேர்வு நடத்துவது யார்?

◆ இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

◆ ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம் இந்தத் தேர்வை நாடு முழுவதும் நடத்துகிறது. 

◆ ஆண்டுக்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் அளிப்பதால், இத்தேர்வு இந்தியாவிலும் உலக அளவிலும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


3. எங்கே படிக்கலாம்?

◆ 23 ஐ.ஐ.டி., 31 என்.ஐ.டி., 19 மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல தனியார் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


4. என்ன படிக்கலாம்?

◆ அறுபதுக்கு மேற்பட்ட படிப்புகளில் சேர இந்தத் தேர்வு அரிய வாய்ப்பு அளிக்கிறது.

◆  பி.டெக். பி.பார்ம், பி.டிசைன், பி.ஆர்க்., போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். 

◆ எம்.பார்ம், எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம். 

◆ ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளிலும் சேரலாம்.


5. தயார் செய்வது எப்படி?

◆ சிபிஎஸ்சி மற்றும் மாநில அரசு பள்ளிகளின் பாடத்திட்ட அடிப்படையிலேயே கேள்வித்தாள் தயாரிக்கப்படும். எனவே, பள்ளியில் பாடங்களை ஆர்வமுடன் படித்து ஆழமாகப் படித்து புரிந்து வைத்திருந்தால் பெரிய தயாரிப்பு ஏதும் இல்லாமல் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற முடியும். 

◆ சில மாணவர்கள் இத்தேர்வை இலக்காக வைத்து உயர்நிலை வகுப்புக்கு வந்த உடனேயே தயாரிப்பை ஆரம்பித்துவிடுவார்கள்.

◆ பாடத்திட்டத்தை ஊன்றி படித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு படிக்க வேண்டும். ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மட்டும் தயார் செய்தால் போதாது.

◆  எந்த விதமான கேள்விக்கும் சுயமாக பதில் அளிக்கும் வகையில் பாடத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

◆ கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப் பழகுவது அவசியம். 

◆ பயிற்சி எடுத்துக்கொள்வதற்கு பல மாதிரித் தேர்வுகளை எழுதலாம். 

◆ இதற்காக சிலர் பயிற்சி மையகளில் சேர்ந்து தயாரிப்பை மேற்கொள்வார்கள். இது போன்ற பயிற்சி மையங்களில் ஒரு நாளில் இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


6. தேர்வு நடைமுறை

◆ இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின் (JEE Main) எனப்படுகிறது. 

இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) என அழைக்கப்படுகிறது. 

◆ இரண்டும் இரு தாள்களைக் கொண்டது. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இத்தேர்வுகளை எழுத முடியும்.


7. ஜே.இ.இ. மெயின்

இரண்டு தாள்களாக நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் இரு நாள்களுக்கும் தேர்வு நேரம் 3 மணி நேரம். 

முதல் தாள் ஆன்லைன் தேர்வாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் அமையும். 

◆ இதில் கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். 

◆ மூன்று பாடங்களுக்கும் சம அளவு மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.

◆ இரண்டாம் தாளில் கணக்கு, வரைபடம் மற்றும் ஆப்டிடியூட் ஆகியவைற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும் ஆப்டிடியூட் கேள்விகள் சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும்.

◆ சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும்.

◆  தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்). 

◆ கேள்விக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட்டால் மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே பதில் தெரியாத கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிடலாம்.


8. ஜே.இ.இ. அட்வான்ஸ் ?

◆ ஜே.இ.இ. மெயின் (JEE Main) தேர்வில் வெற்றி பெற்ற முதல் 2,24,000 பேர் மட்டுமே ஜே.இ.இ. அட்வான்ஸ் (JEE Advanced) தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.

◆  ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

◆  எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 30.

◆  2 ஆண்டுகளுக்குள் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

◆  முந்தைய ஆண்டிலோ நடப்பு ஆண்டிலோ 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

◆ எந்த ஐ.ஐ.டியிலும் ஏற்கெனவே அட்மிஷன் பெற்றிருக்கக் கூடாது.


◆ ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கிறார்கள். 

◆ 2014ஆம் ஆண்டு அதிகபட்சமாக 13.5 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.


9. தேர்வு மையங்கள்

◆ தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 

◆ நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.


Comments

Popular posts from this blog

JEE முதன்மை தகுதி அளவுகோல்கள்..! JEE Primary Eligibility Criteria

JEE முதன்மை 2022 கண்ணோட்டம் | JEE Primary 2022 Overview